பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/388

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. பொருகளத் தலகை வகுப்பு 381 பொழிப்புரை 1. (அதிர்த்த) ஒலிசெய்யும் (பரிபுர பதத்தி) சிலம்பணிந்த பாதங்களை உடையவள், பயிரவி, (அமைத்த கரதலி) அஞ்ச்ல் என்னும் குறிப்பைக் காட்டும்படி பொருந்திய திருக்கர்த்தை உட்ையவள் ஆகிய தேவியின் பிரியத்தைப் பெற்ற்வ்ை (பொருகளத்தலகைகள்) 2. (தமருகம், அடித்த கரத்தர்) உடுக்கை அடித்த திருக்கரத்த்ர்கள்ாகிய (அட்) பயிர்வர்கள் நடிக்கும் நவரசக் கூத்தின் (இலக்கண இலக்கியத்தை) உணர்ந்தவை (பொருகளத் தலகைகள்) 3. அருக்கர் பதமல சூரிய மண்டல அளவல்ல (அதற்கு மேலும் உள்ள) உடுக்கள் பதம் அளவு - நட்சத்திர மண்ட்ல் அள்வு வரை, அடுக்கி வைத் துள்ள பிணங்களை ஒரு (குறட்டில்) ஒரு திண்ணைபோல (அன்டசுவ) பொருத்தி (அல்ங்கரித்து) வைப்பன (பொருகளத்தலகைகள்) சி. (அளக்கர்) கடல் உடைபட்டால் மிக்குப் பெருகுவது போல பெருகும் (குருதியை) ரத்தத்தை ஒருசேர் அடைத்தும், - அடைபட்டவுடன் உடைத்துவிட்டும் (விள்ைய்ாடுவன்). (பொருகளத்தலகைள்) 5. (இறந்துபட்ட) அசுரர்களுடைய முடிகளை அடுப்பாக (வகிர்வன) பங்கிட்டு அமைப்பன் அமைத்து அவற்றில் உலை நீராக ரத்தத்தைப் பெய்வன (பொருகளத்தலகைகள்) நவரச நடம் - (1) வீரச் சுவை (2) பயச் சுவை (3) இழிப்புச் சுவை (1) அற்புதச் சுவை (5) இன்பச் சுவை (6) அவல்ச் சுவை (72 நகைச் சுவை (8) நடுவுநிலைச் சுவை (9) உருத்திரச் சுவை. (சிலப்பதிகாரம் 3, பக்கம்'83) 'குறடு - இறைச்சி கொத்தும் பட்டை மரம் - எனக்கொண்டு அடுக்கப்பட்ட பிணத்தை அப்பட்டை மரத்தில் வைத்து இறைச்சியைக் கொத்துவன - எனலுமாம். "இங்கனம் (கடல்நீரை) அடைத்தும் உடைத்தும் விளையாடும் வேல் என்றார் வேல் வகுப்பில் (அடி 13). 'அசுரர் முடிகள் அடுப்பு: கரம் - அகப்பை உலைநீர் - ரத்தம்; எயிறு உலையிலிட அரிசிபோன்ற பொருள். இது போன்ற கருத்தை