பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/456

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. வேல் வாங்கு வகுப்பு 449 17. அடவி படுஞ்சடை மவுலியில் காடுபோன்ற சடா மகுடத்தில் சடைமுடியில், வெம்பணி கொடிய பாம்பு களையே, அம் பணி ஆம் அழகிய ஆபரணமாம், (அங்கதர்) வாகுவலயமாகத் தோளணியர்கக் தொண்டவரின் (iாம அங்கனை வாமம் இடது பாகத்தில் விளங்கும். (அங்கனை) (பெண்) தேவி. 18. அநுபவை யாவற்றையும் நுகர வைப்பவள்; அம்பிகை - தேவி, அநுதிதை சொல்ல் இயலாதவள் - சொற்கடங் காதவள், அம்பை (அம்பா) தாய் (த்ரியம்பகி) முக்கண்ணி, ஆசாம்பரை - ஆசை திக்குகளை (அம்பரமாக) ஆடையாக உடையவள் (நிர்வ்ாணி), பாசாங்குசை பாசமும், அங்குசமும் கையிற் கொண்டவள் 19. அநகை - பாவமற்றவள், அசஞ்சலை சஞ்சலம் அற்றவள், அதிகுண மிகச் சிறந்த, சுந்தரி அழகி, 鷺 i is ஞானவெளியில் இருப்பவள் - பராகாச வடிவை உடையவள், (க்ாலாந்தகி) கால்னுக்கு யமனாயிருந்தவள் காலனை அட்ட வள், (ம்ேலாந்திரு திருவின் (இலக்குமியின்) மேலானவள் "பாசம் அங்குசம். அணியா. இபமுதத்தன். தொழிற்கெல்லாம்.காரணமாதல் தெளித்த்ருள் கொழிக்கும் கன்னியை உன்னியேத் தெடுப்பாம்" - - தணிகைப் புராணம். '(1) காலாந்தகி காலன் இறைவனது இடது காலால் உதைக்கப்பட்டான். இடது கால் தேவியின் கால் ஆதலால் தேவி - காலாந்தகி - (காலன் +அந்தகி). "வாமச் சேவடி தன்னால் சிறிதுந்தி, உதைத்தான் கூற்றன் விண்முகில்போல் மண்ணுற வீழ்ந்தான்" கந்தபுராணம் 2.5.253. வாமம் இடதுபாகம் " கூற்று மரித்திடவே உதை பார்வதி, "கூற்றினை மோதிய பத சத் ", "கூற்றுவனைக் காய்ந்த "பாதங்களால் வந்த காலன் விழ் மோது சாமுண்டி" திருப்புகழ் 789, 751, 760, 93. (2) தேவியை மேலாந்திரு' என்றார்; (தேவேந்திர சங்க வகுப்பு, அடி 11 குறிப்பு) பெருந்திருமக்ள் என்றார் சம்பந்தர். "பேழை வார்சடைப் பெருந்திரு மகள்தனைப் ப்ொருந்தவைத் தொருபாகம்" . சம்பந்தர் 2-107.6