பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/534

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சித்து வகுப்பு:அநுபந்தம் 527 நிமிளை-21: (அம்பரை) Bismuth. பொன் நிமிளை, வெள்ளிநிமிளை, வெண்கல நிமிளை, செம்பு நிமிளை என நான்கு வகை பொன் நிமிளையும் வெள்ளி நிமிளையும் ஒளஷதங்களுக்கு உபயோகப்படும். பொன் நிமிளை (பற்பம்) பஸ்ம்ம் சுக்கில் விருத்தி செய்யும், கண்ட ஓசையை சுத்தி செய்யும், கண்ணோய்ப் போக்கும்; வீக்கம், மூலம், குட்டம், பாண்டு, காமாலை இவைகளைப் போக்கும். (அனுபோகவைத். ஏழாம் பாகம்). நிலப்பனை-24: இதன் கிழங்கு, வேர் பயன்படும். இதனால் நீரிழிவு, வெப்பம், வெண்குட்டம், விலாக்குத்தல், கண்நோய் விலகும். மேக அனல் தணியும் வெண்குட்டம் தான்விலகும். சூலைமே கங்களொடு துன்னுகரும் புள்ளியும்போம் சால நிலப்பனைக்குத் தான்". (அ. கு) நீலி. அவுரி - பார்க்க. நெய்க்கொடை 12. இது நெய்க்கொட்டையாயிருக்கலாம்: மரவகை, (Soap-nut tree) பூவந்தி, மணிப் புன்கு எனப்படும். இதனால் வயிற்று நோய், தல்ைநோய், சூதக் நோய் விலகும். இதன் காயை (ச்வுக்காரம்) சோப்புக்குப்ப்திலாக வழங்கலாம். ந்ெய்க்கொட்டான் மூலத்தைப் பாலிற்கொள்ள விஷ்க்கடிகள் திரும். பரம்பை - 13: இது வன்னி மரம். இதனால் வளிசன்னி, முப்பிணி, நஞ்சு, சிெறி நீங்கும். வாத சந்தி தோடமறும். விடமும் கபமும் சொறியும்போம். (அ.கு) பலம்.28. (சாதிக்காய்) வசவாசி என்பதைப் பார்க்க இதனால் தலைவலி, இரைப்பு, இருமல் போம். ஆனால் மயக்கத்தைத் தரும். பழுபாகல்-14: பாகல் ஆனது. புழுபாகல்-அல்லது காட்டுப் பாகல், கொம்புப் பர்க்ல், வேலிப் பாகல் (கொல்லம் பாகல்), நரிப்பாகல், நாய்ப்பாகல், நிலப்பாகல், திப்பாகல் என்னும் வகையது. இதனுள் பழுப்பாகலால் புழுநோய், தல்ைவலி, மூலம்,தோலைப் பற்றிய நோய்கள் திரும். பாடலம்-16: இது பாதிரி. இலை, ஆ பட்டை, வேர் பயன்படும். பூவினால் சுரம், மேகம்போம்; வேரினால் நீரிழிவு சொறி, சிரங்கு, வயிற்று மந்தம் போம்.