பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/578

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. கொலு வகுப்பு 571 29. விரிந்த இருளில்) (வலிதரு) பலமாய் விளங்கும் (கிரணமதென) போல (நலமிகும்) இன்பத்தை மிகுதியாகத் தரும்(சுழலில் வீசு) சுழற்றி வீசப்படுகின்ற (குஞ்சம்) ஈயோட்டி ஒருபுறம் (வீசப்பட) 30. வியன் - அதிசயிக்கத் தக்க மரகத ரத்னம் ஒளிவீசும் (தளசு) தாம்பூலம் எடுக்கும் கலங்கள் எதிரிலே (விரைந்து நிரையாய் - வேகத் துடன் ஒழுங்காகக் கொண்டுவரப்பட்டு வரிசையாய் அமைந்த்ன ஒருபுறத்தில் 31. உரிய தகுதியான (வெளிலையுடன்) வெள்ளி லையுடன் - வெற்றில்ையுடன் (உயரிய) உயர்ந்த (கமுகினில்) பாக்குமரத்திலிருந்து (உகுந்த கனியே) உதிர்ந்த பழங்களின் (பகுந்தது) பிளவுகள் (பாக்கு) ஒருபுறம் இருக்க 32. உலகில் உள்ள (வனிதையர்) பெண்கள் (அவரவர் விரதமொடு) தாம் ம் கொண்ட விரதப்படி (உணர்ந்து) ஞாபகமாய்த் தெளிவுடனே (கனியே) பழவர்க்கங்களைக் (கொணர்ந்தது ஒருபால்) ஒருபுறம் கொண்டுவந்து வைக்க: இவ்வாறெல்லாம் கொலு அலங்காரங்கள் விளங்க முருகள் தொறு விற்றிருந்த ஆழகு பின் வருமாறு: 1. கேச்ாதிபாதம் (அடி 33 முதல் 41 முடிய) 33. (அறு கதிரவரென) = 2, DJ சூரியர்கள் போன்று (அறு மணி மவுலிகள்) (பெருமான் அணிந்திருந்த ஆறு ரத்னக் க்ரீடங்களும் (அடர்ந்து) நெருங்கி (வெயிலே) ஒளியே (படர்ந்தது) பரவி நின்றது ஒருபுறத்தே 34. (அறு மதியென) ஆறு சந்திரன் போன்று (அறுதிருமுக) ஆறு அழகிய திருமுகங்களாகிய (சததள) நூறு இதழ்களைக்கொண்டு (அலர்ந்த) மலர்ந்துள்ள தாமரை மலர்கள் (மலர்ந்தது) பொலிந்து நின்றன ஒருபுறம் 34 வேளின் திருமுக ஒளி மதிக்கு ஒப்பிடப்பட்டது "முழுமதியன்ன ஆறு முகங்களும்". கந்தபுரா. 1-20126. முருகவேளின் திருமுகம் மலர்ந்த தாமரைக்கு ஒப்பிடப் பட்டது. "முண்டகம் மலர்ந்த தன்ன மூவிரு முகமும்" கந்தபுராணம் 4-4.235.