பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கந்தரநுபூதி 665 (2) மலையே - இறைவனே மலை’ என்பது ஒரு வழக்கு மலைபோற் பெரியராதலின் - மத்தமும் ஆடரவுடன் வைத்த மலையே' - சம்பந்தர் 2-1104. காட்டுர்க் கடலே கடம்பூர் மலையே' - சுந்தரர் 7-47-1. (3) மலை கூறிடு வாகையனே - இங்கு வாகை (வெற்றி) ஆகுபெயராய் வெற்றிக்கு உரிய வேலைக் குறிக்கின்றது. (கந்தரலங்காரம் 27, பக்கம் 28 குறிப்பு) பிடிதோய் மலை - மலை கைம்மலை - யானை எனக்கொண்டு பிடிதோய் களிறே எனலாம். யானை - கிரிசரம், நதிசரம், வனசரம் எனும் மூவகைய, வள்ளியம்மை மலையில் இருந்ததால் அவள் கிரிசரப்பிடி, அதனால் பிடிதோய் மலையே என்றார். 33. சமுசார வாழ்க்கை என்று தொலையும் சிந்தா குலஇல் லொடுசெல் வமெனும் விந்தா ட்வி என்று விடப் பெறுவேன் மந்த்ா கினிதந்தவரோதயனே கந்தா முருகா கருணா கரனே (அந்) மந்தாகினி......கருணாகரனே! சிந்தாகுல. விடப்பெறுவேன். (பொ.உ) (மந்தாகினி) கங்காநதி (தந்த) ஈன்ற, (வரோதயனே) வரத மூர்த்தியே - வரதுக்குப் பிறப்பிட மாணவனே! (கந்தா) கந்தமூர்த்தியே! முருகனே! கருணைக்கு இருப்பிடமானவனே! சிந்தாகுலம் - (சிந்தா ஆகுலம்) மனத்துக்கு வருத்தம் தருவதான (இல்லொடு) சமுசாரத்துடன் (செல்வம் செல்வ்ம் என்கின்ற (விந்தாடவி) விந்தமலைக்காடு போன்ற சிக்கற் சூழலை என்று நான் விடப் பெறுவேன். (சு-உ) சமுசாரம், செல்வம் என்கின்ற கவலைக்கிடமாம் சிக்கல் என்று ஒழியும். (கு.உ) (1) விந்தாடவி - விந்திய மலையை அடுத்திருக்கும் காடு, மலையைத் தடவிய விந்தத் தடவி தமிழ்நா. 134 - தக்கயாகப்பரணி 62உரை. விசேட உரை பார்க்க விந்தியமலைக் காடு உள்ளே சென்றால் திரும்ப வழி தெரியாத மயக்கம் தரும் பெருங்காடு. சமுசாரம் அத்தகையதே