பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/778

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மயில் விருத்தம் 771 11. 'எந்நாளும் ஒருசுனையில் இந்த்ர நீ லப்போ திலங்கிய திருத்தணிகைவாழ். *எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு நம்பிரானானமயில்ைப் "பன்னாளும் அடிபரவும் அருணகிரி நாதன் பகர்ந்தஅதி மதுர சித்ரப் 'பாடல்தரு மாசறு விருத்தம்ஒரு பத்தும் படிப்பவர்கள் ஆதி மறைநூல் "மன்னான் முகம்பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர் வாணிதழுவப்பெறுவரால் "மகராலயம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர் வாரிசமட்ந்தையுடன்வாழ் "அந்நாயகம்பெறுவர் அயிராவதம்பெறுவர் அமுதா சனம்பெறுவர் மேல் "ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர் அழியாவரம்பெறுவரே. (பொ.உ) (1) (எந்நாளும்) எல்லாத் தினங்களிலும் ஒப்பற்ற (சுனையில்) சுனையில், (இந்த்ர நீலப் போது) இந்திர நீலம் எனப்படும் நீலோற்பலப், போது - மலர் (இலங்கிய) விளங்கும் திருத்தணிகை மலையில் வாழ்கின்ற 2. (எம்பிரான்) எமது தலைவன், இமையவர்கள்தம் பிரான் - தேவர்களின் தலைவன் ஆகிய முருகவேள் ஏறுகின்ற ஒப்பற்ற (மயிலை) நமக்குத் தலைவனாகிய மயிலைப் 3. (பன்னாளும்) பல நாள்களாக, (அடி பரவும்) அடி போற்றும் அருணகிரிநாதன் (பகர்ந்த) சொன்ன (அதிமதுர) மிக இனிமையான (சித்ர) விசித்திரமான 4. (பாடல் தரும்) பாடல்களாக விளங்குகின்ற, ஆசறு (மாசறு) விருத்தம் - குற்றமற்ற விருத்தங்கள் ஒரு பத்தையும் படிப்பவர்கள், ஆதியான (மறைநூல்) வேத நூல்கள் (தம்மிடத்தே) 1 25