பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/794

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேவல் விருத்தம் 787 + 8. வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன் வலியது துவர்ப்பில்லி பேய் வஞ்சினாற் 1 பேதுற ಟ್ಗ அஞ்சிட வாயினும் காலினாலு "பந்தாடி யேமிதித் துக்கொட்டி வடவைசெம் பவளமா கதிகாசமாப் 'பசுஞ்சிறைத் தலமிசைத் தணியயிற்குமரனைப்) பார்த்தன் புறக்கூவுமாம் 'முந்தா கமப்பலகை சங்காக மத்தர்தொழ முன்பேறு முத்தி முருகன் 'முதுகா னகத்தெயினர் பண்டோ டயிற்கனை முணிந்தே தொடுத்த சிறுவன் "சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு சித்தர்க் கிரங்கறுமுகன் செயவெற்றிவேள் (புநிதன் நளினத்தன்முடி குற்றி சேவற் றிருத் துவசம்ே. (பொ.உ.) (1) வந்து ஆரவாரம் செய்து, அந்த மதத்துடன் அடர்த்து நெருங்கும் வகையில்வரும் தண்டேந்திய யமனுடைய வலியது.ாதர்களும், (பில்லி பேய்) பேய்வகைகளும் 2. (வஞ்சினால்) வஞ்சினத்தால் தனது சூளுறவால், பெருங் கோபத்தால் (பேதுற) மயங்கும்படியும், மகா பூதங்கள் அஞ்சும்படியும், தனது வாயினாலும், காலினா லும் 3. (கால்) பந்து (Foot Ball) ஆடுவதுபோல மிதித்து (கொட்டி) அடித்து, (வடவை) வடவர்முகாக்கினியையும் (செம்) (பவளமாக) பவள மணிபோல (அவ்வளவு சிறிய அற்பமான பொருளாக மதித்து, (அதிகாசமாக) பெருநகை புரிந்து 4. தனது பசிய (சிறைத் தலமிசை) சிறகுகளாம் இடத்தின்மீது (முதுகில்) வீற்றிருக்கும் (தனி அயில்) ஒப்பற்ற வேலாயுதம் ஏந்திய முருகவேளைப் பார்த்து அன்புடன் கூவுமாம்; அது எது என்றால்