பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/813

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

806 முருகவேள் திருமுறை (11:திருமுறை முருகனே செந்தி முதல்வனே மாயோன் மருகனே யீசன் மகனே - யொருகைமுகன் தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான் (7) காக்கக் கடவியநீ காவா திருந்தக்கால் ஆர்க்குப் பரமாம் அறுமுகவா - பூக்குங் கடம்பா முருகா கதிர்வேலா நல்ல இடங்காண் இரங்கா யினி (8) பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் பாதங் கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல் ஆசையால் நெஞ்சே யணிமுருகாற் றுப்படையைப் பூசையாக் கொண்டே புகல் (9) நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத் தற்கோல நாடோறுஞ் சாற்றினால் முற்கோல மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித் தானினைத்த வெல்லாந் தரும். (10) வேலு மயிலுந் துணை - O -- ஒருமுரு காஎன்றன் உள்ளங் குளிர உவந்துடனே வருமுரு கானன்று வாய்வெரு வாநிற்பக் கையிங்கனே தருமுரு காஎன்று தான்புலம்பா நிற்பத் தையல்முன்னே திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே. தனிப் பாட்டு