பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/816

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. பரிபாடற் பகுதிகள் 809 2. பரிபாடற் பகுதிகள் குறிப்பு: 5, 8, 9, 14, 17, 18, 19, 21 எண்ணுள்ள பாடல்கள் செவ்வேளுக்கு உரியன. தோத்திர பாகங்கள் ಕ್ಡಿ இங்கு குறிக்கப்பட்டுள. முழுப்பாடல்களை பரிப்ாடல் நூலிற் காண்க -- O -- 5. 1-2-4. பாயிரும் பணிக்கடல் பார்துகள் படப் புக்குச் சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தமர் உழக்கி. நோயுடை நுடங்கு சூர் மாமுதல் தடிந்து. 9 - 13. குருகொடு பெயர் பெற்ற மால்வரை உடைத்து மலையாற்றுப் படுத்த மூவிரு கயந்தலை மூவிரு கயந்தலை முந்நான்கு முழவுத்தோள் ஞாயிற்றேர் நிறத்தகை நளினத்துப் பிறவியை காஅய் கடவுள் சேனய் செவ்வேள்....... 71-81. நின்குணம் எதிர்கொண்டோர் அறங்கொண்டோர் அல்லதை மன்குணம் உடையோர் மாதவர் வணங்கியோர் அல்லதை செறுதி நெஞ்சத்துச் சினநீடி னோரும் சேரா அறத்துச் சீரிலோரும் அழிதவப் படிவத் தயரியோரும் மறுபிறப் பில்லெனும் மடவோருஞ் சேரார் நின்னிழல், அன்னோ ரல்ல தின்னோர் சேர்வா ராதலின் யாஅம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமும் அல்ல நின்பால் அருளும் அன்பும் அறனும் மூன்றும் உருளினர்க் கடம்பின் ஒலிதா ரோயே (2) (கடுவனிள வெயினனார் பாட்டு) (சு-உ) பரிமேலழகர் உரையைத் தழுவியது: கடல் துகள்படப்புக்கு உனக்கு.உரியூ பிணிமுகம் என்னும் யானைமீதேறி, சூரனைச் சங்கரித்து, கிரெளஞ்ச மலையைப்