பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/840

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(36) (37) . (38) 12. உபதேச காண்டம் 833 (துதி) புன்னெறி அதனிற் செல்லும் போக்கினை விலக்கிமேலாம் நன்னெறி ஒழுகச் செய்து நவையறு காட்சி நல்கி என்னையும் அடிய னாக்கி இருவினை நீக்கி யாண்ட பன்னிரு தடந்தோள் வள்ளல் பாதயங் கயங்கள்போற்றி. (6-24-262) (68) கந்த புராணத்தின் பெருமை என்னா யகன்விண் ணவர்நாயகன் யானை நாமம் மின்னா யகனான் மறைநாயகன் வேடர் நங்கை தன்னா யகன்வேல் தனிநாயகன் தன் புராணம் - நன்னா யகமாம் எனக்கொள்க இஞ் ஞாலமெல்லாம். (69) (6-24-265 வாழ்த்து ஆறிரு தடந்தோள் வாழ்க அறுமுகம் வாழ்க வெற்பைக் கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள் ஏறிய மஞ்குை வாழ்க, யானைதன் அணங்கு வாழ்க மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம். (6-24-261) (70) 12. உபதேச காண்டம் (கோனேரியப்பர்) -- O -- பூத்த கற்பகப் பொன்னுல கிமையவர்க் கிரங்கிக் காத்த சேவகன் கடம்பணி பன்னிரு தடந்தோள் ஏத்த நாடொறும் தழும்புமென் னாத் தட வரலாற் சேத்த கிண்கிணிச் சீரடி சென்னி சேர்த் துதுமே (71)