பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/866

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. தணிகை ஆற்றுப்படை (கச்சியப்ப முநிவர் பாடியது) (பகுதி) -- O -- எத்துயர்த் திரளும் அத்தினத் தகற்றும் சரவணப் பொய்கைத் தடம்புனல் துளைந்து மென்மெலக் குன்றம் மீமிசை இவர்ந்து காலை நண்பகல் மாலைமுப் பொழுதும் வைகல் வைகல் மலர்மூன்று தெரிக்கும் நீலப் பைஞ்சுனை நேர்கண்டு தொழுது. வள்ளி நாயகி மணத்தினை முடித்த கள்ள வேழக் கடவுனைப் பணியா விர ரொன்பதின்மர் வார்கழற் றாழ்ந்துமற் றாவயின் வதியும் அமரரைத் தொழுது........ தீரா மலப்பிணி தீர்த்தருள் கொழிப்ப அருட்டிரு வுருவுகொண் டவிர்மணித் தவிசின் ஞான சத்தியும் கிரியா சத்தியும் வானவர் கோமான் வளம்பயில் மகளும் கானவர் நலங்கூர் கன்னியு மாணன இரண்டு பாலும் இருந்தனர் களிப்பக் கண்டமெய் யடியர் கலவினர் போற்ற காணா விண்ணவர் கலவா தேத்தக் கட்கடை ஒழுகும் கருணை நோக்கமோ டினிதுவிற் றிருக்கும் எழில்நேர் காண்டலும் எஞ்சுநோய் துவர இரியல் போக விஞ்சுநாற் பொருளுமே வந்து துவன்ற செய்முறை தெரியாது திருமுன் நிற்ப இருமைப் பயனும் எளிதினுற் றளிக்கும் பூதியும் திருவுருப் பூச்சுநன் களித்திட் டென்னைத் தன்வய மாக்கிய உலகை என்வய மாக்கி...வழிவரு கின்றனன் அத்தகு பெருமான் அருள்விளை யாடலைச் சற்றிது கேண்மதி தவமேம் படுந. இன்னான் ஒருவினை முன்னுபு சென்றவன் பூங்கழற் சேவடி போற்றுதி யாயின் 859