பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/869

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

862 முருகவேள் திருமுறை (11:திருமுறை (2) அறுமு கந்தனில் ஒருமுகந்தனை அடியனேற்குற வாக்கிடீர் அம்பகம்பனி ரண்டி லொன்றிலென் ஆணவங்கெட நோக்கிடீர் வெறிகொள் பன்னிரு கையி லொன்றிலென் வெம்ப வக்கடல் தடுத்திடீர் விளங்கும் ஆறுசெவ் வாயி லொன்றினல் வீடுசேர்மொழி கொடுத்திடீர் செறியும் ஆறிரு செவியில் ஒன்றில்என் செய்தி யாவையுங் கேட்டிடீர் செய்ய மார்பம் ஒராறி லொன்றிலென் செந்தமிழ்த் தொடை பூட்டிடீர் தறுகண் வேடர்கள் உதவுமின் கொடி தனமும் அன்பர்கள் மனமுநீள் தணிகை யங்கிரி முடிய நண்பு தழைத்த செங்கல்வ ராயரே. (140) (கலம்பகம் 66) (3) பெற்றாலும் இனிஒருவர் எனைத்தணிகை வரையகத்தே பெறவும் வேண்டும் உற்றாலும் அருந்தவங்கள் அவ்வரைக்கே உறல்வேண்டும், உயர்ந்த கல்வி கற்றாலும் உமது திருப் புகழமுதே நாடோறும் கற்க வேண்டும் செத்தாலும் இவ்வுடலம் அத்தலமீ துற வேண்டும் சேந்தனாரே. (141) (கலம்பகம் 75)