பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/875

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

868 முருகவேள் திருமுறை (11:திருமுறை குருவித் தகனே எழிலற் புதனே! குஞ்சரி மஞ்சரியும் கொடிய கிராதர் குலக்கொடி யும்புனர் கோவே எப்பொருளும் தருகற் பகமே மயிலைக் கரசே தாலோ தாலேலோ சமர விபாடன குமர சடானன தாலோ தாலேலோ. 147) (இலக்கண விளக்கம் - வைத்தியநாத தேசிகர்) (பழதிப் பிள்ளைத் தமிழ்) கங்கைக் கொருமா மகனே குகனே! கனியே கண்மணியே கருணா லயமே மறையோர் தவமே! கருதும் பெருவாழ்வே திங்கட் சடிலன் மகிழுங் குருவே தேவர்கள் பணிகோவே தெய்வச் சுருதிப் பொருளே பொருளின் தெளிவே களிகூரும் துங்கப் புயனேர் திருமால் மருகா! சோதிச் சுடரொளியே தோகைக் குடையாய் நீபத் தொடையாய் சொல்லுக் கினியானே! சங்கத் தொருவா பழநித் தலைவா தாலோ தாலேலோ தமிழால் உயரும் சிவமா மலையாய் தாலோ தாலேலோ. (148) (விசையைகிரி வேலச் சின்னோவையன்) 4. சப்பாணிப் பருவம் (கேத்திரக் கோவை பிள்ளைத் தமிழ்) திருவலஞ் சுழிஜங்க ரத்தனா லயமெனத் திருஏரகப் பதியெனும் திருநகரம் உன்பொனா லயமெனச், சேய்ஞலூர் திகழ்தண்டி ஆலயமென.