பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/879

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

872 முருகவேள் திருமுறை (11:திருமுறை தினமும் உனது கொலுக்கானச் செல்லா தாரார் திறைவளங்கள் தாரா தாரார். உனது பதம் தனையே வணங்கித் தொழவேண்டித் தழுவா தாரார் எப்வேளை சமயங் கிடைக்கும் என நினைந்து வாரா தாரார் உணதருளை வாழ்த்திப் புகழ்ந்து துதிக்கமனம் வசியா தாரார் பணிவிடைகள் வரிசைப் படியே நடத்தாதார் ஆர்ஆர் எனத்தா லாட்டுகின்ற அரசே வருக வருகவே அருள்சேர் பழநிச் சிவகிரிவாழ் ஐயா வருக வருகவே. (154) o (வேலச்சின்னோவையன்) ஐந்தரு எனுங்கற்ப கச்சோலை வருக அறி வானந்த வெள்ளம் வருக! அனந்தகல் யான மேரு கிரி வருகவே அங்கை ஆமலகம் வருக சிந்தையில் மகோதயஞ் செய்திருளை நீக்கிடுஞ் சிவஞான பானு வருக செனணவெப் பந்தணிக் குங்கோடி மதிவருக தித்திக்கும் அமுதம் வருக எந்தையே வருகன்னை ஈன்றதா யேவருக, என்கண்மணி வருக வருக எண்ணனந் தங்கோடி மன்மதா காரமாம் என்றுமிளை யோன் வருகவே மைந்தனேவருக, மணியே வருக, வள்ளலே வருக வைப்பே வருகவே மாயூர நகர்மேவு கேயூர மணிபுய மயூரவா கனன்வருகவே. (155) (காஞ்சி- சிதம்பர முனிவர்)