பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/884

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. பிள்ளைத் தமிழ்கள் 877 9. சிறுபறைப் பருவம் ஒருத்தியென வள்ளிகலி யாணமுஞ் செய்துயின் உற்றிருந் தருள் மாமலை உமைக்கரன் உரைத்ததென வள்ளிக் கனைத்தையும் உகந்தே உரைத்தருள்மலை மருத்தங்கு நீலமலர் மூன்றுமுப் போதினும் மகிழ்ந்தே தினந்தருமலை வள்ளலுனை அர்ச்சித்து வாசவன் வெள்ளானை வாங்கக் கொடுத்தருள்மலை கருத்தங்கு பவமெலாம் தூரத்தி லேநின்று கண்டோர்க் கொழித்தருள்மலை கண்ணுதலை எந்தை சிவலிங்க வடிவினிற் கண்டுயூ சித்திடுமலை திருத்தணி மலைக்குமர ஈராறு கைக்கொண்டு சிறுபறை முழக்கியருளே தினநீல மலர்மேவு பன்னிரு புயாசலா சிறுபறை முழக்கி யருளே. (164) ( காஞ்சி. சிதம்பர முநிவர்} (முத்துக்குமாரசாமிப் பிள்ளைத் தமிழ்) இழுமென் மொழித்தெளி தமிழின் வடித்திடு நவரசமே இதய இருட்டற உணர்வில் உதித்திடு சுடரொளியே கழுவு மணிக்கலன் நடுவில் இழைத்திடு குலமணியே கணிதரு முக்கனி யொடுவடி கட்டிய சுவையமுதே ஒழுகு நறைச்செழு மலர்விரி யக்கமழ் புதுமணமே உருகும் உளத்தருள் பெருகி உவட்டெழு சலநிதியே பழமறை கட்கொரு முதல்வன் முழக்குக சிறுபறையே பருதி புரிச்சிறு குமரன் முழக்குக சிறுபறையே 165. (குமரகுருபர சுவாமிகள்)