பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-4.pdf/885

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

878 முருகவேள் திருமுறை (11:திருமுறை 10. சிறுதேர்ப் பருவம் (திருவிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ்) மாதரிரு விழியாகும் அம்புக்கும் மதனவேள் வாளிக்கும் நடுவாகியே மாலாகும் அருணகிரி நாதர்அரு னைச்சிகரி வடவாச லிற்பயில, நம் பாதமலர் பாடுநீ என்னஅடி யேனும்.எப் படிபாட என்றஅளவில் பத்திதரு முத்திநகை அத்திஇறை வாஎனப் பாடென்று சொல்லிஇயலாற் பூதலமும் எங்கிளையும் ஈடேறநாவிற் பொறித்தவ ருரைத்த கவிதைப் புத்தமுது பன்னிரு செவிக்குநிறை யக்கொண்டு போதமு னளித்தருளினாற் சீதள மலர்ச்சரணம் உதவுகரனுாராளி சிறுதேர் உருட்டியருளே செயசெயென அமரர்தொழ அசுரர்முடி சிதறுமுனி சிறுதேர் உருட்டியருளே. (166) விழிததும்பிய புனலின் முழுகிவந் தனைபுரியும் அடியார்க ளுக்கமுதமே வினையெனுங் குவடுபொடி படநடம் பயிலுமொரு மயில்வாகனக் கடவுளே பழிசுமந் திடுமசுரர் முடியொடும் தலைசிதற வடிவே லெடுத்த அரசே பவமெனுங் கடலில்விழும் எனையும்அன் பெனுமினிய கரையேற விட்டபுணையே