பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோகை: மெதுவாகப் பேசுங்கள், யார் காதிலாவது விழப் போகிறது (எல்லாரும் காதைத் தீட்டிக் கொள்கின்றனர்) சொற்கோ: என் சொந்த ஊர் வேலூர். இந்திரஜித்: அது தான் ஏற்கெனவே எங்களுக்குத் தெரியுமே. சொற்கோ: பேராசிரியர் மேகலையின் ஊரும் அது தான். (எல்லாரும் மெளனம்) மேலும் அவர் எனக்குப் பக்கத்து வீட்டுக் காரர், (எல்லாரும் கூர்ந்து கேட்கின்றனர்) அவரைப் பற்றிய எல்லாச் செய்திகளும் எனக்குத் தெரியும். வீணா: என்ன தெரியும்? சொற்கோ: அவர் க்ாதலித்தது: காதலில் தோல்வியுற்றது எல்லாம், (எல்லாரும் வியப்போடு பார்க்கின்றனர்) முற்றிய இலையே அழகாக இருக்கிறதென்றால் அது தளிராக இருக்கும் போது கவிஞர் முருகுசுந்தரம் iO2