பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்ரிதா: உண்மை! சிறு அதிர்ச்சியையும் அது தாங்காது. நெடுமுடி: புரிகிறது அம்ரிதா, நீ என்ன கருதுகிறாய் என்று. அம்ரிதா: கனவுகளில் வாழும் வளரிளமைப் பருவத்தை நாம் கடந்தவிட்டோம் நிதர்சனத்தை எதிர் கொண்டு சிந்திப்போம். திருமணம் - ஐந்து நட்சத்திர விடுதி அன்று. அது - நாமே திட்டமிட்டு நாமே கட்டி நாமே குடியேறி நம் ஆயுள் முடியச் சலிப்பின்றி வாழவேண்டிய இல்லம். அவசரம் வேண்டாம் சிந்தித்து - நல்ல முடிவுக்கு வருவோம். (பிரிகின்றனர்) முருகுசுந்தரம் கவிதைகள் 111