பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதிகுயிலின் தீங்குரலைக் கேட்டபோது அவ்விசையில் தன்னைக் கரைத்துக் கொண்டு பாட்டு முடியும் வரை பாரறியேன் விண்ணறியேன் கோட்டுப் பெருமரங்கள் கூடிநின்ற காவறியேன் பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லையடா! என்று பாடினானே அது தான் இலயிப்பு. இதை விரல் விட்டு எண்ணக்கூடிய ஒருசில தமிழ்க் கவிஞரிடமே இன்று காண முடிகிறது. @(56òrsouo (obscurity), [5657Gaufrgol– o #@ (Stream of consciousness) மெளன. மொழி என்று இன்றைய கவிதையில் அதிகமாகப் பேசப்பட்டாலும், அதற்குச் சரியான திறவுகோல் இல்லாமலேயே பலரும் எழுதுகின்றனர். ஷெல்லி குறிப்பிட்டது போல், காலமே சிறந்த திறனாய்வாளன். கடை திறப்பில் தொடங்கிய என் கவிதை அணிவகுப்பு காலத்தின் தீர்ப்புக்கு அனுப்பப் படுகிறது. முருகுசுந்தரம் கவிதைகள்