பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதைத்தவிர வேறு வழியே இல்லை. இதைச் சட்டமாகவே கொண்டு வரவேண்டும், அம்ரிதா: என்னால் முடியாது. ஆசைக்கு ஒன்று வேண்டும் நெடுமுடி: அம்ரிதா; உன் உணர்வுகளை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன் என் பெற்றோரின் இசைவோடும் வாழ்த்துதலோடும் நானுன்னை நிச்சயமாக மணப்பேன். (இருவரும் உள்ள நிறைவோடு பிரிந்து செல்கின்றனர்) காட்சி 10 இடம் : பல்கலைக் கழக நாடக அரங்கம் நேரம் : முன்னிரவு உறுப்பினர்: நம்பி, iணா, சிறுவன் பல்கலைக்கழகத்தின் கலைவிழா, விழாவின் ஒரு பகுதியாக நாடக மொன்று அரங்கேற்றப் படுகிறது. நாடக அரங்கம் நிரம்பி வழிகிறது. மேடையின் ஒரு பக்கத்திலிருந்து இன்னிசை மிதந்து வருகிறது. பல்கலைக்கழக மாணவர்கள்.அந்த நாடகத்தில் பங்கேற்று நடிக்கின்றனர். நாடகம் தொடங்கப் படுவதற்குமுன், அந்நாடகத்தைப்பற்றிய குறிப்புகள் ஒலி பெருக்கியில் அறிவிக்கப்படுகின்றன. முருகுசுந்தரம் கவிதைகள் 125