பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணையாழியையும் தொலைத்து விட்டாயோ? சகுந்தலை: எனது - கற்பைப் பற்றிப் பேச உனக்கு என்ன அருகதை இருக்கிறது? புல் மூடியிருக்கும் படுகுழி போல் பொல்லாத மன்னவனே! சிலந்தியைப் போல் வாய்ப்பந்தல் போட்டு என்னையுன் - வலையில் சிக்கவைத்துவிட்டாய்! அரசாங்க வைரக்கத்தி காதலியைத் - தாக்காது என நினைத்து நானும்தரங் கெட்டேன், துஷ்யந்தன்: பெண்ணே! நீ - அத்து மீறிப் பேசுகிறாய்! உன்னை - எச்சரிக்கிறேன். சகுந்தலை: பெண்டிர் கற்பின் மீது படையெடுப்பு நடத்தும் மன்னா! உன் பஞ்சணையும் இனி எனக்குப் பாம்புப் புற்றுத்தான். நடைதடுக்கி விழுந்தாலும் கவிஞர் முருகுசுந்தரம் 132