பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இனியுன்கையில் நான் தடுக்கி ஒரு போதும்... வீழ மாட்டேன். (மயங்கி விழுகிறாள். அப்போது ஒரு மின்னல் தோன்றிச் சகுந்தலை யை வாரி எடுத்துச் செல்கிறது) ஒலிபெருக்கி: காலத்தின் சிறகு ஐந்தாண் டுகளைக் கடந்து சென்று விட்டது, தேவருலகம் சென்றுமீளும் துஷ்யந்தன் வழியில் ஒரு பர்ணசாலையப் பார்க்கிறான் அழகு அமைதியை மணந்து தூய்மையைப் பிரசவிக்கும் தோற்றம் அது காசிப முனிவரின் ஆசிரமம் மாதலி தேரை அங்கே நிறுத்துகிறான். துடிக்கும் மின்னல் வெட்டாக ஒரு சிறுவன் சிங்கக்குட்டியைப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறான். அவனை - வியப்போடு பார்த்த துஷ்யந்தன்.... துஷ்யந்தன்: தம்பி! சிறுவன்: வணக்கம், முருகுசுந்தரம் கவிதைகள் 133