பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான் கனவு காணவில்லையே! என் தவப்பயன் மீண்டும் என்னை நெருங்கி வருகிறதா? இன்ப அருவி மீண்டும் என்னைக் குளிப்பாட்ட இறங்கி வரப் போகிறதா? நெஞ்சமே! ஏனிப்படித் துடிக்கிறாய்! அவசரப்படாதே! (மின்னலால் தாக்குண்டவன் போல் அதிர்ச்சி அடைந்த துஷ்யந்தன், அச் சிறுவன் அருகில் சென்றமர்ந்து, அவன் முகத்தைக் கூர்ந்துபார்க்கிறான். பாச உணர்போடு அச்சிறுவன் தோள்மீது கையை வைக்கிறான்). (வெளிப் படையாக) உன் தாய்... ? சிறுவன்: அதோ வருகிறாரே! அவர் தான் என் தாய்! (தொலைவில் கையை நீட்டிக் காண்பிக்கிறான். துஷ்யந்தன் நிமிர்ந்து பார்க்கிறான். நட்சத்திர மாலை யணிந்த ஒரு பொன் மேகம் நகர்ந்து வருவது போல் காவியுடையில் காட்டு மலர்சூடி சகுந்தலை அங்கு வந்து கொண்டிருக்கிறாள்.) சகுந்தலை: பரதா பரதா! அங்கு - என்ன செய்கிறாய்? யாரது? (பார்வை முடிச்சிட துஷ்யந்தனும் சகுந்தலையும் அசைவற்று நிற்கின்றனர். பரதன்.அவர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறான்) முருகுசுந்தரம் கவிதைகள் 135