பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெருஞ்சி மலராக இருந்த நீ குத்தும் முள்ளாக முதிர்ந்து விட்டாய்! சகுந்தலை: உண்மைதான், முதிர்ச்சி எனக்குத் துணிச்சலையும் அனுபவத்தையும் கொடுத்திருக்கிறது. உங்களை நான் - கணவராக ஏற்றுக் கொள்கிறேன். மீண்டும் - நீங்கள் என்னைப் பதிவுத் திருமணம் செய்து கொண்டால், துஷ்யந்தன்: атата от 2 சகுந்தலை: இந்த ஆசிரமத்தில்... அதுவும் - இங்கிருக்கும் முனிவர்கள் முன்னிலையில்! (துஷ்யந்தன் மயங்கி விழுகிறான்). காட்சி 11 இடம் : மேகலையின் வீடு நேரம் : Ly fᎢ ©y ☾Ꮼ உறுப்பினர்: மேகலை, நம்பி மேகலை கூடத்தில் அமர்ந்து ஓர் ஏட்டினைப் புரட்டிக் கொண்டிருக்கிறார்; ஒலிப்பதிவம் இலால்குடி ஜெயராமனின் வயலின் இசையை வழங்கிக் கொண்டிருக்கிறது. சின்னஞ் சிறுகிளியே” என்ற பாரதியின் பாடல் இராக மாலிகையில் அருவியாக, அலையாக மின்னல் முருகுசுந்தரம் கவிதைகள் 139