பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வைத்துக்கொண்டு ஒரு பத்திரிகையின் தரத்தை மதிப்பிட முடியாது, வெளுத்த மல்லிகையின் மணம் கண்ணைப் பறிக்கும் போகன் வில்லாவுக்கு உண்டா? தரமில்லாத பொருள்களே அதிக விளம்பரத் தோடு வருகின்றன, மிக உயரத்தில் பறக்கும் வல்லூறுவலிமை மிக்கது. ஆனால்வசந்தத்தைக் கூவியழைக்கும் ஆற்றல் சிறிய பறவையான குயிலுக்குத்தான். ஓவென்றுமெளன அழுகையுடன் ஒடும் ஆறு பரப்பில் பெரியது. ஆனால்சிலம்பிசை குலுங்க மலைச் சரிவில் மலர்களைச் சிதறிப் பாடிக் குதித்து வரும் பளிங்கு நீர் அருவியின் அழகுக்கு அது ஈடாகுமா? நம்பி: அப்படியென்றால் முருகுசுந்தரம் கவிதைகள் 149