பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லைலாவின் சாவையும் அமராவதியின் சாவையும் கண்ணிர் வரிகளால் ஆராதிக்க வில்லையா? இத்தகைய சாக்காடு ‘பிச்சையெடுத்தாவது பெற்றுக் கொள்ளும் தகுதியுடையதுஎன்று சொன்னான் வள்ளுவன். நம்பி: வீணா; போதும்! சாவைப் பற்றிப் பேசியது போதும்! வாழ்வதைப் பற்றிப் பேசு! வீணா: எனக்கு வாழ்வதில் அலாதி விருப்பம், அதுவும்உங்களைப் போன்ற ஒர் உயர்ந்த மனிதரைத் திருமணம் செய்துகொண்டுநம்பி: ஊம்... திருமணம் செய்து கொண்டு... வீணா: வீரமிக்க ஆண் குழந்தைகள் பல பெற்று... நம்பி: பெற்று... முருகுசுந்தரம் கவிதைகள் i53