பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமது உள்ளத் துணர்ச்சிகளை உண்மையாகவே பிரதிபலிப்பதாக நீ நினைக்கிறாயா? ஏழ்மையின் பெயராலும் நாம்ஏமாற்றப்படுகிறோம் குளிர்பதன அறையிலமர்ந்து வெளிநாட்டு மதுவைக் குடித்துவிட்டு ஏழ்மைக்குவக்காலத்து வாங்கும் பட்டுச் சட்டைக் கவிஞர் சுளையும் பணம் கொழுத்த படத்தயாரிப்பாளர்களையும் எனக்குத்தெரியும். இந்தப்போலிப் புத்தர்கள் நாட்டுக்கு நாடு மலிந்து விட்டார்கள் கொட்டில் காவலுக்கு வந்த இடையர்களே கொல்லும் வேங்கைகளாக மாறி விட்டால்...? காப்புப் பெட்டகமே கறையான் புற்றானால்...? இழுக்கும் உயிர்மூச்சே எரிவாயுவாக மாறினால்...? வீணா: அழகான உருவகங்கள்? கவிஞர் முருகுசுந்தரம் i56