பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதுக் கவிதையின் பொருண்மைச் செறிவினை நேர்த்தி செய்திடுவோம்: கவிதையைத் தனிமைச் சிந்தனையில் விளைந்த உணர்வுச் சிதறல் ஆக்கிவிடாது, பொதுமை உணர்வில் விளைந்த அறிவு விவாதப் பொருளாக்கிடுவோம். அரசியல் உள்ளிட்ட அனைத்து வாழ்வியலும் கவிதைக்குள் கொணர்வோம். புதுக்குரல் என்பது ஒற்றைத் தனிக்குரல் அன்று. பொது வெளியில் நின்று புதுக்குரல் இசைப் போம். மொழிக் கலையில் கவனம் காட்டுவோம். நமது கவிதையைத் திரைப் பாடல் போல் இசையாக்கவோ இசைவாக்கவோ வேண்டாம்; வெறும் வருணனைகள் மினுக்கும் சித்திரமாக்க வேண்டாம். உணர்வுத் துடிப்புகள் நிறைந்திட்ட மொழிக் கலையாகவே கவிதையைச் சிறக்கச் செய்வோம். பல புதுக் கவிதைகளின் வரிகள் ஏதோ அயல்மொழிக் கவிதையின் மொழிபெயர்ப்புப் போல வெளிறி அன்னியப்பட்டுக் கிடப்பதைக் கவனித்திருக் கிறீர்கள் அல்லவா? நமது கவிதையினை நம் மொழியின் ஒசை மற்றும் தொனி நலன்கள் தளும்பும் - மொழிபெயர்ப்புக்கு எளிதில் வசப்படாத தமிழ்க் கவிதையாக்குவோம். மேற்குறித்த எமது கருத்துக்களைப் புதிய தமிழ்க் கவிதையின் எதிர்காலம் பற்றிச் சிந்திக்கும் கவிஞர்கள் முழுமைக் கவிதைக்கான ஒரு Gloirorcos ojjang (AMANIFESTOFORTOTALPOETRY) urgåå(5%). பரிசீலிக்க வேண்டுகிறேன். தமிழ்க் கவிதைக்கு நலம் செய்வோமாக. இந்தக் கொள்கை அறிக்கைக்குத் துரண்டல் நல்கும் புதுக் கவிதையாகக் கவிஞர் முருகுசுந்தரத்தின் 'வெள்ளை யானை' அமைந்துள்ளது. தமிழ்க் கவிதைக்குப் புது வழிகாட்டும் இக்கருத்துக்கள் வெள்ளை யானையில் இடம் பெற்றுள்ளன. அவர் வழி தமிழ்க் கவிதை செல்க! II கவிஞர் முருகுகந்தரத்தின் வெள்ளை யானை ஒரு நெடுங்கவிதை; ஒரு குறுங்காவியம்; பழந் தொன்மத்தின் புது விளக்கம்; நிகழ்கால மதிப்புகளின் வெளிச்சத்தில் பழந் தொன்மம் பற்றிய ஒரு விசாரணை. புதுக் கவிதைகள் மரபாகிக் கொண்டு வரும்பொழுது, ஒரு பழந் தொன்மத்தைப் புதுக்கவிதையாக்கியுள்ளார் கவிஞர். முருகுசுந்தரம் கவிதைகள் - 14