பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாற்று என்று கேட்பதில் என்ன குற்றம்? பட்டம் பெறவந்த பல்கலை மாணவர்களைக் கழுதை யென்று சொல்லலாமா? என்ன வாய்க் கொழுப்பு? அந்தப் பேராசிரியரை உடனேமாற்ற வேண்டும் என்று கேட்பதிலே என்ன தவறு? மாணவர் கூட்டமெனும் மதயானைகளை மண்டியிடச் செய்யும் அங்குசம் அகமதிப்பீடு அது நமக்குத் தேவைதானா? சொல்லுங்கள் தோழர்களே! மாணவர்கள்: கூடாது! கூடாது! சொற்கோ: கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும் என்ற வரம்பை நாம் கடந்து விட்டோம்! எவ்வளவு நாட்களுக்குப் பொறுத்திருபப்து? பொறுத்தது போதும்! மாணவர்கள்: பொங்கி எழுவோம்! வீணா: பல்கலைக் கழக நிர்வாகத்தின் பிடிவாதம்! மாணவர்கள்: ஒழிக! கவிஞர் முருகுசுந்தரம் 168