பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பி கல்லெறிபட்டு, பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் மயங்கிய நிலையில் கிடக்கிறான், அவனைச் சுற்றிலும் மாணவர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள், அப்போது மருத்துவர் உள்ளே நுழைகிறார். மருத்துவர்: அன்புகூர்ந்து எல்லாரும் விலகிச் செல்லுங்கள்! நல்ல காற்றுநம்பியின் மேல் படட்டும். (மாணவர்கள் விலகி வெளியில் செல்கின்றனர். வீணா மட்டும் போகாமல் கட்டிலருகே நின்று கொண்டிருக்கிறாள். அவள் கண்களில் கண்ணிர்ப் படலம்) போராட்டம் நடத்துவது எளிது, போகும் உயிரை மீட்டுக் கொடுக்க முடியுமா உங்களால்? இன்று காலைகாட்டுமிராண்டிகளாக நடந்து கொண்டீர்கள் (வீணா தேம்பி அழுகிறாள்.) இப்பொழுது அழுது என்ன பயன்? வீணா: டாக்டர்! நம்பியின் உயிருக்கு... மருத்துவர்: இப்போது ஒன்றும் சொல்ல முடியாது, இரவு எட்டுமணியாகட்டும். (மருத்துவர் வெளியே செல்கிறார். பேராசிரியர் மேகலையும் தோகையும் உள்ளே வருகின்றனர். நம்பியை இரக்கத்தோடு பார்த்த வண்ணம் நிற்கிறார் மேகலை.) மேகலை: காந்தியத்தைத் முருகுசுந்தரம் கவிதைகள் 173