பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆனால்அவையாவும் அவர்கள் நன்மைக்குத்தானே செய்யப்படுகின்றன. கறிவேப்பிலைசிறு செடியாக இருக்கும் போது அதன். நுனியைக் கிள்ளி விடுவது அது நன்றாக வளர வேண்டும் என்பதற்குத் தானே? துணைவேந்தர்: மாணவர்கள். அப்படி எடுத்துக் கொள்வதில்லையே! (மேகலை உள்ளே வருகிறார்) யார் மேகலையா? வாருங்கள்! உங்களைத்தான். ஆவலோடு எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் (மேகலை எதிரில் உள்ள இருக்கையில் அமர்கிறார்) மேகலை: (மனதிற்குள்) ஆகா! என்ன குழைவு! என்னையும்... தேவைப்படும் போது கறிவேப்பிலையாகப் பயன்படுத்திக் கொண்டு மற்ற சமயங்களில்தூக்கி எறிந்துவிடுகிறீர்! (வெளிப்படையாக) அப்படியா! துணைவேந்தர்: இதனை இதனால்... முருகுசுந்தரம் கவிதைகள் 177