பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் குறள் நினைவுக்கு வரவில்லை. மேகலை: இவன் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல். துணைவேந்தர்: ஆமாம்! நல்ல குறள்! இந்த மாணவர் போராட்டத்தை முடித்து வைப்பதற்கு ஏற்றவர் நீங்கள் தான். மேகலை: வள்ளுவர் கூட 'அவன்கண் விடல்" என்று தானே கூறுகிறார் அவள் கண் விடல்' என்று கூறவில்லையே? ஆண்களால் முடியாத காரியத்தைப் பெண்ணாகிய நான்... (மனதிற்குள்) என்னுடைய அருமை இப்போது தான் தெரிகிறதோ? தமிழ்த் துறை என்றால் உமக்கு எப்போதும் மாற்றாந்தாய் மனோபாவம் தானே! படு! நன்றாகப்படு! துணைவேந்தர்: மேகலை! நீங்கள் அப்படிச் சொல்லக் கூடாது, பட நாகம் கவிஞர் முருகுசுந்தரம் 478