பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(மெளனம். எல்லாரும் விழிக்கின்றனர்.) ஏன் உங்கள் வாயடைத்து விட்டது? பேசுங்கள் (எல்லாரும் தலைகுனிகின்றனர்) பேசமாட்டீர்கள்! அக்காரணத்தை வெளியில் சொல்ல உங்கள் நாகூசுகிறது! அப்படித் தானே? வெளியில் சொல்லமுடியாத காரணத்துக்காக வேண்டாத கோரிக்கைகளை முன்வைத்துப் போராடுகிறீர்கள்: குட்டி ஆட்டைக் குறை கூறிக்கொன்ற ஈசோப்பின் ஒநாய்க்கும் உங்களுக்கும் என்ன வேறுபாடு? இந்திரஜித்: எங்கள் மீது பல்கலைக் கழக நிர்வாகத்திற்கு ஏற்பட்ட அவநம்பிக்கையினால் தானே பெண்கள் விடுதியின் வாயிலை அடைத்தார்கள்? நாங்கள்என்ன குற்றம் செய்தோம்? மேகலை: நீங்கள் ஏதும் குற்றம் செய்யவில்லை! முருகுசுந்தரம் கவிதைகள் 184