பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தன்மை என்ன? கொற்கோ: மறியல்! மாணவர்களை வகுப்புக்குச் செல்ல வேண்டாமென அமைதியாக வேண்டிக் கொள்ளுதல். மேகலை: பின்னர் வேண்டுதல் எப்படி வன்முறை ஆயிற்று? ஏன்கல்லெறிந்து தாக்கினர்கள்? அப்படியென்றால்உங்கள் போராட்டத்தின் மீது உங்களுக்கே நம்பிக்கையில்லை என்பது தானே பொருள்? (மீண்டும் மாணவர்கள் தலைகுனிகின்றனர்) நம்பிஇப்போது கல்லெறிபட்டுச் சாகக் கிடக்கிறான், இதைக்கொலை முயற்சிக்குற்றமாகக் காவல் துறையில் புகார் செய்யச் சென்ற கல்லூரி நிர்வாகத்தை நான் தடுத்து நிறுத்தியிருக்கிறேன். அவவாறு புகார் கொடுத்தால் உங்களுள் முருகுசுந்தரம் கவிதைகள் 183