பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று குறிப்பிடுவது காவியக் கட்டமைப்பில் ஒரு முன்னறிவிப்புத் திட்டம் என்று கொள்ளலாம். இதைத் கருத்தில் கொண்டே ஆசிரம அகலிகையை யானைத் தீவருத்துவதாகக் காட்டுகிறார்கவிஞர். வேள்வித் தீயும் காமத்தீயும் வருத்தும் பெண்மையின் சுடராக அகலிகை திகழ்வது குறியீட்டுத் தன்மை வாய்ந்த காவிய நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும். கங்கை ஆற்றில் குளிக்கும் போது அகலிகையின் மன வெள்ளத்தில் எழும் காட்சிச் சித்திரங்களும், ஒரு கந்தர்வ கானத்தின் அதிர்வு அலைகள் அவள் உடலில் இறங்குவது போன்ற பிரமைகளும், முதல் இரவில் அகலிகையின் மனவெள்ளக் காட்சிகளும், இந்திரன் அகலிகையுடன் இணையும் போது அவளுடைய உணர்ச்சிக் கிளர்ச்சி பற்றிய சித்தரிப்புகளும் திட்டமிட்ட சர்ரியலிச எழுத்தாகத் தீட்டப் பெற்றுள்ளன. இந்தக் காவியத்தில் ஒர் அலங்காரமாகவோ, புதுமை நோக்கும் போக்காகவோ இயங்காமல் காவியக் கருத்தின் இயைபு கெடாத உயர் உத்தியாக சர்ரியலிசம் கையாளப்பட்டுள்ளது. ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான், தருமுசிவராமு போன்ற தமிழ்க் கவிஞர்கள் சர்ரியலிசத்தைப் படிமமாகவும், உத்தியாகவும், அபத்த அடிக்கருத்தாகவும் (Absurdthemes) கவிதைகளில் கையாண்டு இருந்தாலும் கூட, ஒரு காவியத்தின் இயைபு கெடாத வகையில் சர்ரியலிசத்தைப் பயன்படுத்தியுள்ள முதற்கவிஞர் முருகுகந்தரம்தான். கனவுகள் (dreams) பிரமைகள் (hallucinations) 2 (5Loftopoći (transformations) (5soujóðah (symbols) gogfigulj படிமங்கள் (marvel images) வியப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கிய சர்ரியலிச எழுத்தாக வெள்ளை யானை அமைந்துவிட்டது. தமிழ்க் கவிதை வரலாற்றில், இந்தக் காவியம் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகிவிட்டது. அகலிகைத் தொன்மம் பெண்ணுரிமை பேசுவதற்கான ஒரு களம்; புதுமைப்பித்தன் முதல் கவிஞர் ஞானி, கவிஞர் சிற்பி வரை பலரும் பெண்ணுரிமை பேசப் பயன்படுத்திக் கொண்ட களம். முருகுசுந்தரமும் அவ்வாறே பேசுகிறார். ஆனால் இந்தக் காவியத்தில் பேச்சுக் குறைவு; காட்சி அதிகம். 'யானைக் கனவு வெள்ளத்தில் ஒரு சுரைக் குடுவையாக மிதக்கும்.அகலிகைக்குச்சாபவிமோசனம் கூட ஒரு யானை.ஆகவேண்டும் என்ற உறுதிச் சொல்லாக வெளிப்படுகிறது. இங்கு சமூக மதிப்புகளால் தண்டிக்கப்பட்ட பெண்மையைவிடவும், உறுதியால் உயர்கின்ற அகலிகையைப் பார்க்கிறோம். அகலிகையின் குரலில் ஒர் உறுதி நிறைந்த பெண்மையின் உரிமைக்குரல் கேட்கிறது என்றால், கவிஞர் தீட்டியுள்ள சித்திரங்கள் அவருடைய எழுது கோலை, ஓர் இயல்பான பரிவின் விளிம்பில் முருகுசுந்தரம் கவிதைகள் 15