பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயங்கரவாதத்தில் ஈடுபடட்டும் ஆனால்அடைக்கலந் தந்த நாட்டை அவதிக்குட்படுத்தலாமா? நம்பி: எத்தனை பெண்கள் தாலி இழந்து தவிக்கின்றனரோ! எத்தனை தாய்மார்கள் கண்ணிர்க் கடலில் வீழ்ந்து கவலைப் படுகின்றனரோ! காட்சி 24 இடம் : பெங்களூர் நெடுமுடியின் இல்லம் நேரம் : } !! 4}{} உறுப்பினர்: நெடுமுடி, நம்பி, மேகலை, அம்ரிதா எதிரில் அழகிய அல்சூர், ஏரி. சுற்றிலும் உள்ள எழில்மிகு கட்டிடங்களில் எரியும் விளக்குகள், வண்ணப்பட்டு முடிச்சுகளாகத் தண்ணீர்ப் பரப்பில் மின்னிக் கொண்டிருக்கின்றன. காலையில் நெடுமுடி அம்ரிதா திருமண நிகழ்ச்சி பெங்களுர்த் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பெற்றோர்களும், சுற்றத்தாரும், நண்பர்களும் குழுமியிருந்து மணமக்களை வாழ்த்தினர். மாலையில் நெடுமுடியின் இல்லத்தில் நம்பியும் மேகலையும் மணமக்களோடு உரையாடி மகிழ்கின்றனர். மேகலை: சில செடிகள் தமது பூக்களின் வண்ணத்தாலும் மயக்கும் மணத்தாலும் தம்மைப் பெரிதாக விளம்பரப்படுத்திக் கொள்கின்றன. ஆனால் காய்ப்பதில்லை. கவிஞர் முருகுசுந்தரம் 214