பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/228

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்பியங்கள் கண்ணிர்த்தவம் ஏக்கப் பெருமூச்சா! இன்னிசைப் பாட்டா! கண்ணிர்த் தவங்கள் கடைப்பிடித்து நான்வளர்த்த பன்னிர் வரங்களைப் பறித்தெடுத்துச் சென்றவரார்? அரும்பி மலராத ஆசையை எரிப்பதற்கு... பண்ணிற் கலந்தஇக் கண்ணிர் வரிகள் என்றன் செவியில் இடறி விழுந்தன; வேதனைத் தூண்டில் விழுந்ததென் நெஞ்சில்; இதய நரம்பைப் பறித்தெடுத் தெவரோ உதய ராகம் மீட்டுகின் றாரே! ஏக்கப் பெருமூச்சை இன்னிசைப் படுத்திப் பாக்க ளாகப் பாடுகின்றாரே! இசையில் என்னை இழந்தப் பாடலை அசைபோட்ட வண்ணம் மெதுவாய் நடந்தேன். காலைப் பனித்துளி முட்டைகள், என்றன் கால்பட்டு உடைந்து கலைந்து சிதறின. சும்மாட் டுத்தலைக் கிராமத்துப் பெண்டிர் வாயை முன்றானையால் மறைத்த வண்ணம் பாற்கூடை தூக்கி எதிரில் வந்தனர். கம்பங் கதிர்வால் அணிற்பிள்ளை போலக் கவலை ஏற்றம் கத்திக்கொண்டிருந்தது. கவிஞர் முருகுசுந்தரம் 222