பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரும்போகும் உயிர் மூச்சு அதிகாரிக் கோர்கணக்கும், இருட்டில் வேறோர் அறைக்கணக்கும் வைத்திருக்கும் விலாங்கு வாழ்க்கை முதலாளி வெல்லச்சு முதலி யாரின் மூளையென வாழ்ந்துவரும் கண்ணன் என்பான் எதிரேதும் பேசாத கணக்கப் பிள்ளை; எள்ளென்று சொல்வதன்முன் எண்ணெ யாகும் மதிநுட்பம் மிகவுடையான்; பட்டம் பெற்ற மதிப்புடையான்; நுகத்தடிக்குக் குனியும் காளை. நாதக்கிண் கிணித் தண்டைக் கோதை, மெல்ல நடந்துவரும் இசையழகை நாளும் கண்ணன் காதுக்கண் ணால்பார்ப்பான்; இவனைத் தாண்டிக் கடந்துசென்றால் தலைநிமிர்ந்து கண்ணால் பார்ப்பான், மாதுக்கும் மந்தநடை பின்னும்; ஒர மதுக்கண்கள் சிறக்கணிக்கும்; இரண்டுள் ளத்தைப் பாதிக்கும் பொருள் பொதித்த கொக்கிப் பார்வை பட்டுப்பட்டுத் தெறிக்கும்; பதைக்கு மங்கே. பாடுகின்ற கின்னரக்கால் அடிகள், நாளும் படுகின்ற நிலத்தின்மேல் நடக்கும் போது கோடியின்பம் அவன்பெறுவான்; அவளு டம்பைக் குளிப்பாட்டி வருகின்ற தென்றல், தன்னை நாடிவரும் போதெல்லாம் சிலிர்ப்பான்; அந்த நளினமயில் மாடியன்றோ கண்ணன் கண்கள் தேடுகின்ற மேலுலகம்; அந்தத் தேவி திருவடியின் நீழலன்றே திளைக்கும் முக்தி. கவிஞர் முருகுசுந்தரம் 226