பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டால் இறப்போம்நாம்; பாராமல் இக்கணமே கண்டி பினாங்கிற்குக் கண்மறைவாய்ச் சென்றுகூழ் உண்டு பிழைத்திடுவோம் உங்களுக்குச் சம்மதமா?” என்றவனைக் கேட்பதற்கு எண்ணினாள்; கேட்கவில்லை. வட்டத்திற் குண்டா முதல்முடிவு என்பதெல்லாம்? ஒட்டுப் பலகை பிரித்தால் உடையாதா? கட்டுப்பட் டார்காதல் வட்டத்திற் குள்ளென்றால் விட்டுப் பிரிதல் மிகவெளிதா? பெற்றோர்கள் கண்சோர்ந்த நாளெல்லாம் காதலர்கள் மாடியின்மேல் பண்சேர்ந்த வீணையும் பாட்டும்போல் ஒன்றானார். வீட்டுக்குள் மூடி மறைத்தாலும் தும்மலைப்போல் காட்டிக் கொடுப்பதுதான் காதலுக் குள்ளகுணம். விரைந்தொருநாள் மாடியின் மேல்வீரா சாமி மறைந்திருந்து கண்டான்; மடமயிலை அக்கண்ணன் ஆடை களைந்தே, அவளுடம்பைக் கூந்தலினால் மூடி மறைத்து விளையாடிக் கொண்டிருந்தான். ஆவ லுடன்சமைத்து ஆறவைத்த நல்லுணவைக் காவல் நாய் கவ்வுவதைக் கண்ட அவளண்ணன் கொன்று குவிக்கக் கொலைவாளைத் தூக்கினான்; நின்றான்; சிறிது நிதானித்தான்; தந்தையிடம் பேரேட்டுப் பூச்சியென்று பேசா திருந்துவிட்டோம்; தேரோட்டக் காதல் நடத்துகிறான் கோதையிடம்! சேல்விழியாள் வேலப்பர் செல்வமகள் என்றறிந்தும் வேல்முனையில் ஏறி விளையாட்டாய்க் குந்திவிட்டான்! தாயில்லாப் பெண்ணென்று தட்டி வளர்க்காமல் நீரன்றோ வீட்டில் நெருப்பை வளர்த்துவிட்டீர்!! என்று குமுறினான். இதைக்கேட்ட வேலப்பர் 'நன்று மகனே! நடுங்காதே! நாளை கணக்கன் கணக்கை முடித்துவிடு; சற்றும் சுணக்க மினிவேண்டாம்; சொன்னபடி செய்' என்றார். தந்தை மகனிருவர் தாங்காப் பெருந்துயரைச் சிந்தையிலே தேக்கிச் சிறுசலனம் இன்றிப் முருகுசுந்தரம் கவிதைகள் 231