பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைமேல் இருந்து மங்கை பங்கன் நகர்க்கெழுந் தருளும் நான்காம் திருவிழா மிகச்சிறப் பாக நடந்துகொண் டிருந்தது. சிரிப்பு நெருப்பு வாண வேடிக்கை இருட்டில் பகலை எய்துகொண் டிருந்தது. ஆடு துறைக்குழல் மந்திரக் காரன் தோடி மேகத்தை ஊர்மேல் ஏவி நாகசுர மழையால் நனைத்துக்கொண் டிருந்தான். கண்ணனும் வீரா சாமியும், மலைமேல் இன்னும் இருந்தனர்; இறைவனைத் தொழுதனர். உச்சிப் பிள்ளையார் கோவிலை அடைந்தனர். அச்சமயத்தில் மக்கள் கூட்டம் புற்றில் இருந்துகீழ் இறங்கும் எறும்புபோல் சுற்றம் சூழ இறங்கிக்கொண் டிருந்தது. மலைமேல் மயான அமைதி சூழ்ந்தது. பிள்ளையார் கோயிலுக் கருகில் இருக்கும் கல்லை ஊரார் வறடிகல் என்பர். பிள்ளை இல்லாதவரும். தமக்கோர் கிள்ளையைத் தேடி மணக்காதவரும் வறடி கல்லைச் சுற்றுவர், எண்ணம் விரைவில் முடியும் என்பத னாலே. 'கண்ணா நமக்கோ கரும்புத் திருமணம் இன்னும் ஏனோ நடைபெற வில்லை. எதிரில் இருக்குமிக் கல்லைச் சுற்று வதனால் கோதையர் மணப்பரோ நம்மை?” என்று கேட்டான் iரா சாமி. கோதை என்னும் கொஞ்சும் சதங்கை காதில் விழுந்ததும் கண்ணன் எழுந்தான்; ஆவல் அவனை உந்த விரைந்து தாவினான் வறடி கல்லின் பக்கம். ஒட்டில் காலை வைத்தான்; பின்னால் முருகுசுந்தரம் கவிதைகள் 233