பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கருங்குழல் எரிந்த பின்னர் கரியேது? பனித்தநீர் நனைத்த செங்கண் பட்டிதழ் விரித்தாள்; காம்பு நுனித்தளிர் விரலால் கண்ணிர் நோக்காட்டைச் சுண்டி விட்டாள்; கனித்தமிழ்க் கண்ணன் வந்த கனவுவாள் நெஞ்சக் கூட்டைத் தனித்தனித் துண்டாய் வெட்டித் தணலிலே போட நொந்தாள். கருங்குழல் நாக பந்தக் கவிதையைக் கலைத்தாள்; காந்தள் விரும்பிடும் கையால் நெற்றி விளக்கினை அணைத்தாள்; மார்பில் அரும்பிடும் பார மெல்லாம் யார்க்கென வெறுத்துத் தேகக் கரும்பினை ஒடித்துத் தேக்குக் கட்டிலின் மீது போட்டாள். அணைக்கின்ற போதில் எல்லாம் அருவியில் குளிக்கும் இன்ப நினைப்பினைக் கொடுக்கும் கண்ணன் நெடுமார்பும், இறுகப் புல்லும் பணைத்தோளும் மலைமேல் என்ன பாடுபட் டிருக்கும் என்று கணப்போது நினைப்பாள்; கண்ணிர்க் கடலிலே தெப்ப மாவாள். கவிஞர் முருகுசுந்தரம் 238