பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவளைக் கைகாட்டி அழைக்கிறான் படகு நெருங்க நெருங்க அவன் தொலைவில் போய்க் கொண்டே இருக்கிறான். அவள் - நீட்டிய கைகளோடு நிற்கிறாள் DD அப்போதுயானையின் கழுத்து மணியாகக் குலுங்கிச் சிரிக்கும் தபோவனத்துச் சேடியர்கள் அகலிகை அடியே அகலிகை!" என்றழைக்கும் ஆரவாரக் குரல்! [ அகலிகை - பிரமனின் விடலைக் கனவுகள் அவன் கற்பனையையும் மீறித் தானாக விழுந்த சிருஷ்டி அதிசயம். egy (TLD @ ı_! u j IT அணிவகுப்பின் மீது விழுந்த அதிரடித் தாக்குதல். தவசிகளின் சலனம்; தபோவனத்தின் கண்தாகம்; பற்றற்றார் பற்று. சுற்றியெரியும் ஒமகுண்டத்தின் உச்சியில் மெலிதாக அசைந்தாடும் நீலநிறத் தீக்கொழுந்து. முருகுசுந்தரம் கவிதைகள் 19