பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இவ்வுலகின் இடுப்பொடியப் படைந டத்தி ஈழத்தை வெற்றிகொண்ட ராச ராசன் எவ்வுலகும் வியப்படையத் தஞ்சா வூரில் எழுப்பிவைத்த உளிப்பாட்டை அறிவேன்; சோழர் கொவ்வையிதழ்க் குலக்கொடியே குன்ற யானைக் குலோத்துங்கன் இப்படிய்ோர் சிற்பக் கோயில் எவ்விதமாய்ச் சிலைப்பளிங்கால் எடுத்தான்? கூறாய்!” என்றவளை வியப்போடு கவிஞன் கேட்டான். 'கற்சிலைகள் எனக்கூறும் பேசா ஊமைக் கனவுகளைச் சிறைப்படுத்திச், சோழ மன்னர் கற்கோயில் பலவெடுத்தார்; அவைகள் எல்லாம் கருக்கொண்ட விருத்தவரிக் கம்ப நாடன் சொற்கோயிற் கொப்பாமோ? அடிகள் தோறும் சுவைபழுத்த அக்கோயில், காலம் வென்று நிற்கின்ற கலைக்கோயில்; சோழர் கோயில் நிலையற்ற கோயிலென்று நங்கை சொன்னாள். நெடிலடிபோல் தன்காலை மடித்து வைத்து நேரிழையாள் அவனருகில் அமர்ந்தாள்; சோழர் முடிமணியே! எனவழைத்தான். பிரித்தெ டுக்க முடியாத பார்வையினால் முடிந்து கொண்டார். கொடுமுடியில் கூடுகட்டும் ஈக்கள் போலக் கோமகளும் பாட்டுக்கோன் மகனும், தங்கள் அடிமனத்தில் தேனடைகள் அடுக்க டுக்காய் ஆயிரங்கள் தித்திக்க நிரப்ப லானார். முருகுசுந்தரம் கவிதைகள் 24了