பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அலையலையாய் இறங்கிவரும் அருவிக் கூந்தல் ஆற்றினிலே குளித்தெழுந்தான் கவிஞன், பாயும் கொலைவேற்கண் விழுப்புண்கள் தனது மார்பில் கோடிபெற்றுப் பெருவீரன் ஆனான்; சோழன் கலைக்காப்பி யத்திற்குக் கம்பன் அம்பி காபதியோர் விருத்தியுரை இன்று செய்தான். நிலையுண்டா இழுக்கின்ற நீரில்? சொந்த நினைப்பின்றி இருவருமே மிதந்து சென்றார். உள்ளங்கள் ஓரிரண்டும் கரைய, இன்ப ஊற்றெடுக்கக் காதலர்கள் இரண்டு பேரும் வெள்ளங்கள் கலப்பதுபோல் கலந்து, காதல் விரிகடலில் சங்கமித்தார்; பொருள் பொதிந்த கள்ளங்கள் பார்வையிலே வளர்த்தார்; கண்ணில் கனவுகளைத் தாலாட்டி வளர்த்தார்; வானம் பிள்ளைநிலா வளர்ப்பதுபோல், இரண்டு பேரும் பேரரசன் அரண்மனைக்குள் அலர் வளர்த்தார் கைவைத்தோர் எரிமலையை மூடி விட்டால் கக்காமல் இருந்திடுமா அனற்கு ழம்பை? மைவைத்த கண்ணுடையார் கள்ளக் காதல் மறைத்தாலும் தெரியாமல் போவ தில்லை! பைவைத்த படவரவைப் போன்ற மன்னன் பதைத்தெழுந்தான்; பாய்கின்ற வேங்கை யானன். கைவைத்துப் பறித்தெடுத்துக் காதற் பூவைக் காலாலே தேய்ப்பதற்குத் துணிந்து விட்டான். கவிஞர் முருகுசுந்தரம் 248