பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இனிமேலென் வானத்தைக் கவிதை பாடும் இளையநிலா அளக்காது; சிதைந்த என்றன் பனிமலரில் வீணைவண்டு சுற்றி வந்து பாட்டரங்கம் நடத்தாது; மூக்கு மூச்சும் இனியெனக்குச் சீறுகின்ற பாம்பே ஒட்டி இருக்கின்ற உயிருடலம் தீயும் பஞ்சும்! தனிமையிலே எனக்கேது வாழ்க்கை!" என்று தரைமீனாய்த் துடித்தழுதாள் தஞ்சைத் தையல். அலைவாயில் பிறக்காத அழுத வெண்பா அதிகாரி புகழேந்தி ஓடி வந்து கொலைவாளின் குறுக்காகப் பாய்ந்தான்; 'சைவக் குலோத்துங்கா கொலைத்தொழிலை நிறுத்தி வைப்பாய்! கலைவேந்தன் பெருங்கம்பன் சபிப்பான்; சோழர் கால்வழியே அறுந்துவிடும்; கவிதை நாற்றுத் தலையுடலில் வாழட்டும்; கம்பன் பிள்ளை தமிழுலகை வாழவைப்பான் எனத் தடுத்தான். 'படைநடத்தும் மன்னவன்நீ; கம்பன் பிள்ளை பாநடத்தும் இளவரசன், கவிதை வீரன். தொடைமணக்கும் மார்பழகுத் தோகை, அந்தத் தோள்மணக்கும் இளங்கவியைக் கைப்பி டிக்கத் தடையென்ன போர்மன்னா! தந்தி யாழைத் தமிழ்விரல்கள் தடவட்டும்; தடுக்க வேண்டாம். மடைநடக்கும் வாய்க்கால்கள் சூழும் தஞ்சை மாநகரில் மணமுடிப்பாய்' என்று சொன்னான். முருகுசுந்தரம் கவிதைகள் 251