பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'அக்பர்ஷா அரியணையில் மகுடஞ் சூடி அடுத்தேறும் சலீம்ஷாவே! கோட்டை மீது மொக்குமலர்க் கொடிபடர்வ துண்டா? தங்க முகப்பட்டம் மானுக்கும் உண்டா? நொண்டி அக்கரையை நினைப்பதுவும், வான வில்லை ஆடையென்று கருதுவதும் தப்பா? என்மேல் சொக்கட்டான் ஆடுவதை நிறுத்தி விட்டுச் சொல்லுங்கள் சரியான விளக்கம்' என்றாள். 'அரங்கத்தில் ஆடுங்கால், இந்தத் தில்லி அரியணையில் கட்டாயம் ஆடும்; இந்தச் சுரங்கச்சொல் எதற்காகப் பேசு கின்றாய்? சொல்லாடி கல்மண்ணாய்ப் பிசையும் அக்பர் இரும்புக்கை தடுத்தாலும், இராச புத்ர எரிநெருப்புத் தீக்காடு குறுக்கிட் டாலும் துரும்பெனக்கு மொகலரசின் தலையெழுத்துன் துணைக்காலில் ஆடுகிற தென்று சொன்னான். 'கண்ணிகளில் நீகாஜல்; பாரசீகக் காப்பியத்தில் ஷாநாமா, குரல் வளர்க்கும் பண்ணிசையில் தான்சேனின் அமுத கீதம்; பாவை நீ நான்வணங்கும் பள்ளி வாசல்; பெண்ணினத்தில் பொன்னினம் நீ; வான் வளர்க்கும் பேரினத்தில் பிறையினம்நீ; அன்பே உன்னைக் கண்ணென்றால் நமையுறக்கம் பிரிக்கும்; ரத்தக் கால்வாய் நீ என்னுடம்பில்; நடக்கும் மூச்சு! கவிஞர் முருகுசுந்தரம் 260