பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரும்தீர்ப்பு நீதிக்கே அன்றி, நெஞ்சைத் தடவுகின்ற என்பேச்சுக் காக வேண்டாம் நெருங்கிவரும் சாவுக்குத் தப்பி வாழ நினைப்பது என் நோக்கமன்று; சூழ்ச்சி என்று தெரிந்திருந்தும் கொடுமைக்குத் தலைவணங்கும் தீர்ப்புக்கே அஞ்சுகிறேன்; நேர்மைக் காக எரிநெருப்பில் குளிப்பதற்கும் தயங்கமாட்டேன்! இறைச்சிக்குக் குழந்தையினைக் கொல்ல லாமா? விண்ணைவிட மிகப்பெரிய போர்வை யில்லை வெங்கதிரோன் போல்பெரிய விளக்கு மில்லை என்னுடைய தொண்டைவிடப் பெரிய தொண்டும் இந்நாட்டில் இனிநிகழப் போவ தில்லை மண்ணுலகில் என்னறிவை முதலாய் வைத்தே மதிப்புலமை வளர்ந்தாக வேண்டும்; நீல விண்மீது விடிவெள்ளி எழுந்த பின்தான் வெயில்வட்டம் இருள்கிழிக்கும் தலையை நீட்டும். கொல்லவந்த நல்லவரே! உங்கட் கொன்று கூறுகிறேன்; வல்லவர்கள் சாகும் போது சொல்லுகின்ற சொல்லுக்கு வலிமை யுண்டு; சுழற்காற்று கட்டாயம் மாறி வீசும். கல்லெடுத்து வீசுகிறீர்! எதிர்கா லத்தில் கட்டாயம் உம்மீது மலையே வீழும்! நில்லென்று நீர்க்குளத்தில் தள்ளு கின்றீர்! நெருப்பாற்றில் நீர்மூழ்க வேண்டி நேரும்! கவிஞர் முருகுசுந்தரம் 268