பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துணையோடு நானுறங்கும் இராக்கா லத்தில் தூங்காமல் நின்றெரியும் விளக்கே உன்னை அனைத்துவிட்டால் ஏற்றுதற்கு முடியும். ஆனால் அழகேறி ஆட்சிசெய்யும் இவளு டம்பில் இணைத்திருக்கும் உயிர்விளக்கை அனைத்துவிட்டால் ஏற்றுதற்கு முடியாது மீண்டும்; வைரக் கணையாழி போலிருந்த இவளோ, இன்று கைநழுவிக் குப்பையிலே வீழ்ந்து விட்டாள். குருதியைப்போல் மலர்கின்ற பூவே உன்னைத் கொடியினின்றும் பிரித்துவிட்டால் அன்றே வாடிச் சருகாகிப் போகின்றாய்; உன்றன் வாழ்க்கைச் சரித்திரமும் முடிந்துவிடும்; உன்னைப் போல் என் அருகிருக்கும் அழகரசி இறந்த பின்னால் அவளின்பம் எனக்கில்லை; ஆத லாலே மெருகிருக்கும் அவள் பளிங்குக் கன்ன மேட்டில் மெல்லுதட்டில் கடைசிமுத்தம் விதைக்கின் றேன்நான். சீசரைப்போல் வாழ்ந்தென்ன? உலகை வென்ற சிகந்தரைப்போல் படைவீரம் காட்டி யென்ன? காசுமலை மேலேறிப் பாரசீகக் காவலர்போல் இருந்தென்ன? ஹோம ரைப்போல் ஆசுகவி ஆயிரந்தான் அடுக்கி யென்ன? அத்தனையும் தான்மணந்த பெண்ணொருத்தி மாசுடையாள் என்றொருசொல் தோன்று மாயின் மணல்வீட்டைப் போல்நொடியில் சரிந்து போகும்! கவிஞர் முருகுசுந்தரம் 272