பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எச்சிலிலை நாகரிகம் அமெரிக்கப் பாராளு மன்றத்தில் 1964ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 19ஆம் நாள் குடியுரிமை மசோதா (Civil Rights Bill) சட்டமாக உருப்பெறுவதற்கு அடிப்படைக் காரணமாக விளங்கியவர் மறைந்த மாவீரர் ஜான் எஃப் கென்னடி. 1962ஆம் ஆண்டு நிறவெறியை எதிர்த்து வானொலியில் ஒரு சொற்பொழிவாற்றினார் அவர். அச் சொற்பொழிவின் கவிதை யுருவமே இது. துரணொன்று சரிந்துவிட்டால் விண்ணை முட்டும் தூயமணி மாளிகையே சரிந்து போகும் ஆணவத்தால் தனியொருவன் உரிமை தன்னை அழிக்குங்கால் நாட்டுரிமை அழிந்து போகும் வீண்பெருமை பேசுகிறீர்; ஓரி னத்தை வேதனையில் தள்ளுகிறீர்; கறுப்பர் என்று நாணமின்றிப் பேசுகின்றீர்; தலையும் தோளும் நடமாடும் கால்களினை இகழ்தல் போலே. பன்னாட்டார் இந்நாட்டைத் தேடி வந்தோம் பழமரத்தைத் தேடிவரும் பறவை போல. தன்னாட்சிப் போர்செய்தோம்; அடிமை வாழ்வைத் தகர்த்தெறிந்தோம்; எல்லாரும் இந்த மண்ணில் பொன்னாட்டை உருவாக்கப் பாடுபட்டோம் புகுந்தவர்கள் பிறப்பாலே ஒப்பர் என்றே இந்நாட்டில் சட்டங்கள் இயற்றி வைத்தோம்; இன்றைக்கு நாமதனை மறந்து விட்டோம். கவிஞர் முருகுசுந்தரம் 274