பக்கம்:முருகுசுந்தரம் கவிதைகள்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெங்கு மேடையுண்டோ, நாம்வி டுக்கும் எவுகணை எதுவரைக்கும் பாய்வ துண்டோ, அங்கெல்லாம் சுதந்தரத்தின் பெருமை பற்றி அழகாகப் பேசுகிறோம்; ஆனால் நாமோ இங்கிருக்கும் நீக்ரோவர் சுதந்த ரத்தை எச்சிலிலை ஆக்குகிறோம்; நிலவெரிக்கும் திங்கட்பெண் வானத்தில் சோரம் போனால் தெரியாமல் போய்விடுமா உலகத் தார்க்கே? எம்முறையில் பிறர்நம்மை மதிக்க வேண்டும் என்றேநாம் இந்நாட்டில் நினைக்கின் றோமோ, எம்முறையில் நம்மக்கள் கல்வி கற்றே ஏற்றங்கள் பெறுவதற்கு நினைக்கின் றோமோ, அம்முறையில் நீக்ரோவர் வாழ்வ தற்கே அனைத்தையும் நாம் செயல்வேண்டும்; இல்லா விட்டால் நம்மையினி உலகத்தார் மதிக்க மாட்டார்; நாகரிகர் என்றினிமேல் சொல்ல மாட்டார். கதிரின்றி விண்ணுக்குப் பெருமை யில்லை கற்பனையின் சிறப்பின்றிக் கவிதை யில்லை முதிராத புலமைக்கு வரவேற் பில்லை முட்டாளின் ஆட்சியிலே வளர்ச்சி யில்லை அதிகாரம் இல்லாத ஆட்சி யாளன் அரியணையில் வீற்றிருந்தும் பயனே இல்லை மதிப்பென்ன பெற்றிருந்தும் பொதுமை எண்ணம் மலராமல் சிறப்பதில்லை மக்களாட்சி. கவிஞர் முருகுசுந்தரம் 276